திருச்செந்துாரில் சுமார் 500 மீட்டர் துாரத்திற்கு உள்வாங்கிய கடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2024 10:10
துாத்துக்குடி; திருச்செந்துார் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து, அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் துாரத்திற்கு நேற்று மாலை கடல் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 100 அடி துாரத்திற்கு பச்சை பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால், பவுர்ணமிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.