பதிவு செய்த நாள்
15
அக்
2024
10:10
அவிநாசி; அவிநாசி மடத்துப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி வட்டம், மடத்துப்பாளையம் பகுதி வினோபா வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 30ம் தேதி பூச்சாற்றுதல் காப்பு கட்டுகளுடன் துவங்கியது. அதன் பின், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். புரட்டாசி திருவிழாவில், சாமி சப்பரத்தில் ஊர்வலமாக ராமர் கவ்வாளம் எடுத்து கோவிலுக்கு வருதல், அதன் பின்னர் அலங்கார பூஜை, தீபாராதனை, அணிக்கூடை படைத்தல் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு,மடத்துப்பாளையம் வினோபா வீதி ஊர் பொதுமக்கள் சார்பில்,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.