பதிவு செய்த நாள்
15
அக்
2024
05:10
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வில்வ இலை, பால் உள்ளிட்ட பொருட்களை நந்தியம் பெருமானுக்கு வழங்கி வழிபாடு செய்தனர்.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷ வழிபாட்டிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி பிரதோஷமான இன்று சிவ பெருமானை வழிபட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெரியகோவிலில் இன்று (15ம்) நடந்த பிரதோஷ விழாவில், நந்தியம் பெருமானை வழிபட்டனர். அப்போது நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, பெருவுடையார், பெரியநாயகி, வராஹி உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தனர்.