பதிவு செய்த நாள்
15
அக்
2024
06:10
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, பெரிய நந்திய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பால், மஞ்சள், மூலிகை பொடி, சந்தனம் என பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பிரதோஷத்தை முன்னிட்டு, மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.