அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2024 11:10
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரி வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.