சஷ்டி விரதம்; சரவணபவ சொல்லி முருகனை வழிபட சகலமும் கிடைக்கும்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2024 10:10
முருகனுக்குரிய விரதங்களில் சஷ்டி விரதம் முக்கியமானது. முருகனுக்கு அறுபடை வீடுகள், ஆறுமுகம் போல ஆறாம் திதியான சஷ்டியும் சிறப்பு மிக்கது. மும்மூர்த்திகளின் அம்சமான முருகன் பகைவனுக்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். முருகனுக்கு நிகர் யாருமில்லை.
முருகனுக்கென எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் அதில் சிறந்தது சஷ்டி. இந்த சஷ்டி நாட்களில் முருகனுக்காக விரதமிருந்து மனமுருகி வழிபட்டால் நமக்கு வேண்டியதை கொடுத்து அருள்வான் முருகன். ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானது. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டியில் தரிசிக்க தடைபட்டுவந்த செயல்கள் யாவும் நிறைவேறும். இன்று முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பு. சஷ்டியில் முருகனை சரணடைந்து கந்தலோகத்துக்குள் செல்லும் நல்லருள் பெறுவோம்!