நிம்மதியாக வாழ காஞ்சி மகா பெரியவர் சொல்லும் அறிவுரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2026 11:04
* தேவையான அளவுக்கு பணம் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம். * தினமும் வீட்டில் பூஜை செய். கோயிலுக்கு செல். பாவம் குறையும். * போதும் என்ற மனதுடன் வாழ். ஆடம்பரம் செய்ய மாட்டாய். * உனக்கு பிடித்த தெய்வத்தை வணங்கு. மனம் ஒருமுகப்படும். * மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கவே கூடாது. * பெண் வீட்டார் விருப்பமுடன் சீதனம் கொடுத்தாலும் பெறக் கூடாது. * தேவையில்லாத எந்த பொருளையும் வாங்காதே. * தோல்வி வரும் போது தான் மனம் அதிகமாக கடவுளின் பக்கம் செல்லும். * ஆசை இல்லாவிட்டால் கடவுளின் தரிசனம் கிடைத்து விடும். * ஆசை இருக்கும் வரை பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கும். * துன்பம் வருகிறதா... நல்ல செயல்களை அதிகமாகச் செய். * சாஸ்திரம் சொல்லும் விஷயங்களை செய். ஒழுக்கம் தானாக வரும். * புண்ணியம் செய்தால் தேவலோகம் செல்லலாம். பாவம் செய்தால் நரகமே கிடைக்கும். * ராம நாமத்தை சொல். மனதில் அமைதி குடி கொள்ளும். * கடலில் சேரும் நதி போல் மனம் எப்போதும் கடவுளை சேர வேண்டும்.