Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்கள் நிறைந்த தலக்காடு நிம்மதியாக வாழ காஞ்சி மகா பெரியவர் சொல்லும் அறிவுரை நிம்மதியாக வாழ காஞ்சி மகா பெரியவர் ...
முதல் பக்கம் » துளிகள்
நாகங்களின் ராஜா கோரிக்கையை ஏற்று சூடாவில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகங்களின் ராஜா கோரிக்கையை ஏற்று சூடாவில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியர்

பதிவு செய்த நாள்

31 மார்
2026
09:03

உடுப்பி மாவட்டம் கார்காலா தாலுகாவின் சூடா கிராமத்தில் அமைந்து உள்ளது சூடா ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில்.

புராணங்களின்படி, கடவுள்களுக்கும், அரக்கர்களுக்கும் இடையே போர் மூண்டது. அப்போது, கடவுள்களை தாரகாசுரன் அடைத்து வைத்திருந்தான். அவர்களை மீட்கப்பதற்காக சுப்பிரமணியர் வந்தார். சுப்பிரமணியருக்கும், தாரகாசுரனுக்கும் இடையேயான போரில், தாய் சக்தி வழங்கிய வேலினால், தாரகாசுரனை வதம் செய்தார்.

போரில் வெற்றி பெற்ற பின், அமைதியான வாழ்க்கை வாழ, பாம்புகளுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சுப்பிரமணியரின் தீவிர பக்தரான பாம்புகளின் ராஜாவான வாசுகி, என்னுடனே எப்போதும் இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

வாசுகியின் பக்தியால் மகிழ்ந்த சுப்பிரமணியரும் அதற்கு சம்மதித்தார். எங்கெல்லாம் நாக ஆராதனை நடக்கிறதோ, அங்கெல்லாம் நானும் இருப்பேன் என்றும், வாக்குறுதி அளித்தார். அதன்படி முன்னொரு காலத்தில், முனிவர் பார்கவா, வாசுகி மஹா நாகராஜாவுடன், சுப்பிரமணியரையும் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் இக்கோவிலில் சுப்பிரமணியரையும், பாம்புகளையும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

நாகதோஷம் நீங்கவும், திருமணம் நடக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், குடும்ப பிரச்னைகள் தீரவும், பக்தர்கள் இங்கு வந்து பூஜை செய்கின்றனர். பிரச்னைகள் தீருவதாக நம்புகின்றனர்.

நவம்பர் – டிசம்பர் மாதங்களில், இக்கோவிலில் திருவிழா நடக்கிறது. நாகபஞ்சமி மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் வாசுகி மற்றும் இதர பாம்புகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதுதவிர, கந்த சஷ்டி, ஆண்டு ரத உத்சவமும் நடத்தப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar