பதிவு செய்த நாள்
01
நவ
2024
07:11
மேட்டுப்பாளையம்; தீபாவளியை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1008 லட்டால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், தாளத்துறை அருகே டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டி குடியிருப்பு பகுதியில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ஆஞ்சநேயருக்கு தினசரி பூஜையும், சனிக்கிழமை சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்று காலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து சுப்ரபாதத்துடன் விழா துவங்கியது. அதைத்தொடர்ந்து விசேஷத் திருமஞ்சனம், அலங்கார பூஜையும், சகசர நாமம், அர்ச்சனை, தளிகை, நிவேதனம், மங்கள ஆரத்தி ஆகியவை நடந்தன. பின்பு, 1008 லட்டால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்து, பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து தீபாவளி ஆஸ்தானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஆஞ்சநேயரை வழிபட்டனர். சிறப்பு பூஜைகளை தாசன் ரிஷி பட்டர் செய்தார்.