கேதாரி கவுரி நோன்பு ; அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2024 10:11
விழுப்புரம்; தீபாவளி நாளில் விழுப்புரம் அமைச்சார் அம்மன் கோவிலில் பெண்கள் கேதாரி கவுரி நோன்பிருந்து சுவாமியை வழிப்பட்டனர். தீபாவளி பண்டிகையை யொட்டி, பெண்கள் தங்களின் குடும்ப வாழ்வில் ஒற்றுமை நிலவவும், இல்லத்தில் செல்வம் நிறைந்து மகிழ்ச்சி ஏற்படுவதற்காக 21 நாட்கள் விரதமிருந்து கேதாரி கவுரி நோன்பிருப்பது வழக்கமாகும். இதையொட்டி, விழுப்புரம் அமைச்சார் அம்மன் கோவிலில் கேதாரி கவுரி நோன்பிருந்த பெண்கள், விரதத்தை முடித்தனர். அதையொட்டி, தங்களின் வீட்டில் தயார் செய்த இனிப்பு பலகாரங்களை சுவாமிக்கு வைத்து பூஜித்தனர். பின், பெண்கள் பூஜித்த படையல்களை தங்களின் வீடுகளுக்கு மகிழ்ச்சியாக கொண்டு சென்றனர்.