குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2024 05:11
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது.
குன்றக்குடியில் உள்ள சண்முகநாதப் பெருமான் கோயில் சஷ்டி விழா கடந்த நவ. 2 ஆம் தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடந்தது. இன்று மதியம் மலையிலிருந்து வேல் இறங்கும் நிகழ்ச்சியும், மாலை சண்முகநாதப் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அன்னை சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, வேலுடன் சண்முகநாதப் பெருமான் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார். மாலை 6.30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை தொடந்து வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பிறகு சுவாமி மலைக்கு திரும்பும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்திருந்தார். நாளை பகல் 11 மணிக்கு திருமுழுக்காட்டு நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.