பதிவு செய்த நாள்
09
நவ
2024
09:11
உடனடி நிவாரணம் தரும் கடவுளாக காலபைரவர் விளங்குகின்றார். வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட தேவையான அனைத்தும் கிடைக்கும். இன்று அஷ்டமி, பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும். காலபைரவர் சிவ அம்சம் கொண்டவர். இவரை அஷ்டமி நாளில் வழிபட எதிரி பயம், மனக்குழப்பம், கடன்தொல்லை, தொழிலில் பிரச்னை, திருஷ்டி தோஷம் நீங்கும். "கால என்றால் "கருப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். சிவனுக்கு "காலகண்டன் என்ற பெயருண்டு. விஷம் குடித்ததால் கருநீல நிற கழுத்தைக் கொண்டவர் என்பது இதன் பொருள். பைரவரும் கரியவரே. எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்யம். பைரவரை ஆறு வளர்பிறை அஷ்டமிகளில் வழிபட வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று பைரவர், சிவனை வழிபட்டு தடைகள் யாவும் நீங்க பெறுவோம்!