கூவானை ஐயனார் கோயிலில் புரவியெடுப்பு; கிராமத்தார்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2024 10:11
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கூவானை மலை அடிவாரத்தில் பூரனை, புட்காலை சமேத கூவானை ஐயனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று புரவியெடுப்பு திருவிழா நடத்தப்பட்டது. முன்னதாக 15 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டப்பட்டு பிடிமண் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புரவி பொட்டலில் வைத்து 2 பெரிய புரவிகளும், 3 சிறிய புரவிகளும் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று புரவி ஊர்வலம் துவங்கிய நிலையில் சந்திவீரன் கூடம் வந்தடைந்த புரவிகளுக்கு கிராமத்தார்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு அனைத்து புரவிகளும் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.