திருப்பதியில் நவ.17ம் தேதி வனபோஜனம்; பார்வேட்டு மண்டபம் வருகிறார் மலையப்ப சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2024 12:11
திருப்பதி: திருமலையில், பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள, பார்வேட்டு மண்டபத்தில், ஒவ்வொரு ஆண்டும் வனபோஜனம் நடத்துவது வழக்கம். அதன்படி, வரும் நவ.17ம் தேதி பார்வேட்டு மண்டபம் பகுதியில், வனபோஜனம் நிகழ்ச்சியை தேவஸ்தானம் நடத்துகிறது.
ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி யானை வாகனத்திலும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியர் தந்த பல்லக்கிலும், பஜனை குழுவினர் உடன் வர, பார்வேட்டு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுவர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு மூலிகை கலந்த நீர், பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். விழாவை முன்னிட்டு, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.