பிரம்மாவிற்கு நான்கு முகம் இருக்கும். இவரை ஒரு முகத்துடன் பார்க்க விரும்பினால் மதுரை யானைமலை அருகே உள்ள கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோயிலுக்கு வாருங்கள். பிரம்மாவிடம் இருந்து வேதங்களை அசுரர்கள் பறித்துச் சென்றனர். இதை ஹயக்கிரீவர் வடிவம் எடுத்து மீட்டுக்கொடுத்தார் பொருமாள். இங்குள்ள ஒருமுக பிரம்மா வழிபட்டு வேதங்களை பெற்றுக் கொண்டார். இக்கோயிலுக்கு அருகே வைணவப்பெரியவர்களில் ஒருவரான பிள்ளைலோகாச்சாரியாருக்கும் கோயில் உள்ளது. அந்நியப் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ரங்கநாதப்பெருமாளின் உற்ஸவர் சிலையை காப்பாற்றியவர் இவரே. படையெடுப்பின் போது அச்சிலையை இத்தலத்தில் உள்ள குகையில் வைத்துதான் பாதுகாத்தார். பின் பத்திரமாக ஸ்ரீரங்கத்தில் கொண்டு சேர்த்தார். இவரை வழிபட்டால் பாதுகாப்பு பணியில் சிறந்து விளங்கலாம்.