பதிவு செய்த நாள்
13
நவ
2024
04:11
கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காட்டில் உள்ள சென்னி யாண்டவர் கோவில், நூற்றாண்டுகள் பழமையானது. இங்கு, ராஜகோபுரம் கட்ட வேண்டும், பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 3.29 கோடி ரூபாய் செலவில், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்ட அரசு அனுமதி அளித்தது. இன்று முதல்வர் ஸ்டாலின் காணோளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கோவில்வளாகத்தில் நடந்த பூமி பூஜையில், எம்.எல்.ஏ., கந்தசாமி, அறங்காவலர் குழு தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் முருகேசன், நகராட்சி தலைவர் மனோகரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர்.
பக்தர்கள் மகிழ்ச்சி: சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விஷேச தினங்களில் கோவிலில் விரதம் இருந்து முருகனை வழிபடுவர். பல ஆண்டு கோரிக்கையான ராஜகோபுர பணிகள் துவங்கியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.