பதிவு செய்த நாள்
27
நவ
2012
09:11
புதுடில்லி: ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டதை அடுத்து, மாதா அமிர்தானந்தமயி, இம்மாதம், 29 மற்றும் 30 தேதிகளில், சீனாவில் சொற்பொழிவாற்றுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலராக, கோபி அன்னன் இருந்த போது, உலக நாகரிகங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில், ஆன்மிக பெரியவர்களின் சொற்பொழிவுகளுக்கு, உலக நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டது.அந்த வகையில், கேரளாவை சேர்ந்த, மாதா அமிர்தானந்தமயி, சீனாவின், ஷாங்காய் நகரில் சொற்பொழிவாற்ற உள்ளார்.சீனாவுக்கு முதல் முறையாக செல்லும் அமிர்தானந்தமயி, இதற்கு முன், பல முறை, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், ரஷ்யா போன்ற பல நாடுகளில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.