பதிவு செய்த நாள்
27
நவ
2012
10:11
காஞ்சிபுரம்: செவிலிமேடு அதியமான் நகரில் உள்ள, ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. கடந்த 24ம் தேதி காலை 7:30 மணிக்கு மஹா கணபதி ஹோமம் துவங்கி, பல்வேறு பூஜைகள் நடந்தன.25ம் தேதி காலை 7:00 மணிக்கு அனுக்ஜை, அங்குரார்பணம், புண்ணியாவசனம், வேதபாராயணம், ம்ருத்ஸங்கரஹணம், நவாக்னிவஜம், ஹோமம், இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை 6:50 மணிக்கு சிவாச்சாரியார் கலசத்திற்கு புனித நீரை ஊற்றினார். கும்பாபிஷேகத்திற்கு கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு உற்சவர் வீதியுலாவும் நடந்தன.