தேய்பிறை பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2024 09:11
கோவை; உக்கடம் - சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் கார்த்திகை மாதம் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு வஸ்திரம் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேய்பிறை பஞ்சமி வாராஹி அம்மனை வழிபட உகந்த நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.