Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோகத்தில் தவிக்கும் ... தேய்பிறை பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தேய்பிறை பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ஹிந்துக்களைத் தவிர மாற்று மத ஊழியர்களை வெளியேற்ற முடிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ஹிந்துக்களைத் தவிர மாற்று மத ஊழியர்களை வெளியேற்ற முடிவு

பதிவு செய்த நாள்

20 நவ
2024
08:11

திருப்பதி: திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் ஹிந்துக்களைத் தவிர, மாற்று மதத்தினரை விருப்ப ஓய்வு பெற அல்லது வேறு துறைகளுக்கு இடமாற்றம் கோரும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. திருமலையில் இனி ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள திருப்பதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில் இந்த மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், திருப்பதி கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் மாற்றப்பட்டனர். பி.ஆர்.நாயுடு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதுகுறித்து பி.ஆர். நாயுடு கூறியுள்ளதாவது: ஹிந்து கோவிலில் ஹிந்துக்களை தவிர மற்ற மதத்தினர் பணியாற்ற அனுமதிக்க முடியாது. ஹிந்து மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேவஸ்தானம் கோவில்களில் பணியாற்றும் அனைத்து மாற்று மதத்தினரும் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவர். ஒன்று அவர்களாகவே, வி.ஆர்.எஸ்., எனப்படும் விருப்ப ஓய்வு கேட்டு செல்லலாம் அல்லது வேறு துறைகளுக்கு பணியிடமாற்றம் கோரலாம். திருப்பதி கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் வைப்பதற்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்த அனுமதிக்கப்பட்டது. அந்த ஹோட்டல் சட்டவிதிகளை மீறியது. அதனால் அதன் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, திருப்பதியில் ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar