Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை வெள்ளி; லலிதாம்பிகை ... காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ அர்ச்சனை காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனத்தில் ஞான பீடாரோகண விழா; திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனத்தில் ஞான பீடாரோகண விழா; திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

22 நவ
2024
02:11

மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் ஞான பீடாரோகண விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். குருமகா சன்னிதானம் ஞானபீடம் அமர்ந்த நாளையொட்டி ஞானபுரீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், ருத்ர ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடந்தது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம்  முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் பூர்ணாஹூதியாகி கெடத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் ஞானபுரீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. அதனையடுத்து குருமகா சந்நிதானத்திற்கு கலசபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.  பூஜைகள் மற்றும்  கலசபிஷேகத்தை  திருக்கடையூர் ராமலிங்க குருக்கள்  தலைமையில் கணேஷ் மகேஷ் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் ஐயப்பன் உள்ளிட்ட குருக்கல்கள் செய்து வைத்தனர். தொடர்ந்து 27வது குருமகா சந்நிதானம் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், துர்க்கை அம்மன் கோயில்கள் மற்றும்  சொக்கநாதனர் பூஜை மடத்தில் வழிபாடு செய்த பின்பு, ஆதீனத்தில் உள்ள ஞானபீடத்தில் அமர்ந்தார். அவருக்கு திருஞானசம்பந்த  தம்பிரான் சுவாமிகள் மகா தீபாராதனை செய்து வழிபட்டார். ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. குருமகா சன்னிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது சபேச சிவாச்சாரியார் பணியை பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கி கவுரவித்தார். இதில் ஆதின தம்பிரான் சுவாமிகள், ஆதின பொது மேலாளர் ரங்கராஜன், ஆதின கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, சைவ வேளாளர் சங்க மாநில தலைவர் சொக்கலிங்கம், நகராட்சி தலைவர் செல்வராஜ், வணிகர் சங்க பொறுப்பாளர் செந்தில் வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar