பதிவு செய்த நாள்
27
நவ
2024
01:11
உத்திரமேரூர்; உத்திரமேரூரில், குடவோலை கல்வெட்டு கோவில் எனப்படும், வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து, சுற்றுலாப் பயணியர் வந்து செல்கின்றனர். இங்கு மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. இந்நிலையில், நேற்று பெய்த மழையினால், கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணியர், சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவ்வப்போது, மழை பெய்யும் போதெல்லாம், வளாகத்தில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த, நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. எனவே, குடவோலை கல்வெட்டு கோவில் வளாகத்தில் மழைநீர் வடிகால் ஏற்படுத்த, சுற்றுலாப் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.