Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் வரதராஜப் பெருமாளுக்கு ... கள்ளக்குறிச்சி ஐயப்ப சுவாமிக்கு 108  திரவிய அபிஷேகம் கள்ளக்குறிச்சி ஐயப்ப சுவாமிக்கு 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லன எல்லாம் தரும் ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர்; பிரதோஷ நேரத்தில் திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
நல்லன எல்லாம் தரும் ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர்; பிரதோஷ நேரத்தில் திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

28 நவ
2024
11:11

திருத்தல வரலாறு; இத்திருக்கோவில் சிறந்ததொரு புராண தலமாகும். பிரமாண்ட புராணத்தில் இக்கோவிலைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. நாம் அனைவரும் முக்கண்ணுடைய எம்பெருமான் சிவபெருமானை தரிசித்திருப்போம் . ஆனால் இத்திருத்தலத்திலோ ஸ்ரீ நரசிம்ம பெருமாள் முக்கண்ணுடையவராய் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். நரசிம்ம அவதார காலத்தில் இக்கோவிலை சுற்றி பெரிய ஆரண்யம் (காடு) இருந்ததாகவும், அக்காட்டில் ஜாபாலி என்னும் மஹரிஷி தவம் செய்து கொண்டிருந்ததாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீ நரசிம்ம பெருமாள் இரண்யனை வதம் பண்ணியவுடன் உக்ர நரசிம்மா (அதாவது கோப மூர்த்தியாக) காட்சி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. கோவில் அமைப்பின்மூலம் பார்க்கும் போது பல்லவர் காலத்திய குடைவரைக் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.


கீழ்கண்ட ஸ்துதியை நம்பிக்கைஉடனும், மன உறுதியுடனும், உள்ளம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால்பெருமாள் நம்மை காத்து ரக்ஷிப்பார் என்பது அனுபவப்பூர்வ உண்மை.


ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி


ஜிதந்தே மஹாஸ்தம்ப ஸம்பூத விஷ்ணோ!

ஜிதந்தே ஜகத்ரக்ஷணார்தாவார

ஜிதந்தே ஹரே! பாடலாத்ரௌ நிவாஸின்

ஜிதந்தே ந்ருஸிம்ஹ ப்ரஸீத ப்ரஸீத

நமஸ்தே ஜகந்நாத விஷ்ணோ முராரே


நமஸ்தே ந்ருஸிம்ம அச்யுதாநந்த தேவ

நமஸ்தே க்ருபாலோ சக்ரபாணே

நமஸ்தம்ப ஸம்பூத திவ்யாவதார

பரப்ரஹ்மரூபம் ப்ரபுத்தாட்டஹாஸம்

கரப்ரௌல சக்ரம் ஹரப்ரஹ்மஸேவ்யம்


ப்ரஸந்நம் த்ரிநேத்ரம் ஹரிம் பாடலாத்ரௌ

சான்மேக காத்ரம் ந்ருஸிம்ஹம் பஜாம்

கிரிஜந்ருஹரிமீசம் கர்விதாராதி வஜ்ரம்

பரமபுருஷமாத்யம் பாடலாத்ரௌ ப்ரஸன்னம்


அபய வரத ஹஸ்தம் சங்கசக்ரேததாநம்

சரண மிஹபஜாம் சாச்வதம் நாரஸிம்ஹம்

ஸ்ரீந்ருஸிம்ஹ! மஹாஸிம்ஹ! திவ்யசிம்ஹ!

கிரிஸம்பவ! தேவேச! ரக்ஷமாம் சரணாகதம்…!!!


மிக ஆபத்தான சூழ்நிலையிலும், சங்கடமான நிலையிலும், அச்சத்தில்இருக்கும் தருவாயிலும், இந்த ஸ்துதியை இதய பூர்வமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் அஹோபிலவல்லி சமேத ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஓடோடி வந்து நம்மை காத்து ரக்ஷிப்பார் என்பது அனுபவபூர்வமாககண்டறிந்த பேரின்பம்.


ஸ்ரீ நரஸிம்ஹ! மஹாஸிம்ஹ! திவ்யஸிம்ஹ! கிரிஸம்பவ! தேவேச! ரக்ஷமாம் சரணாகதம்.


கோவில் சிறப்புகள்:மார்கழி, தை மாதங்களில்நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது.


இந்தத் தலத்திற்கு சிங்கபெருமாள் கோவில் என்றே பெயர்.மலையைக் குடைந்து பல்லவர்கள்பாணியில் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் இது. நரசிம்மர் அகக்குகையான இதயத்தில்வசிப்பதாக வேதங்கள் விவரிக்கின்றன. எனவே, இங்கு புறத்திலும் கற்குகைக்குள் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார். சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்ம திருத்தலங்களில் பழமையும் தனித்துவமும் கொண்டது இத்திருத்தலம்.


உக்கிர நரசிம்மராய் அமர்ந்ததால்நெற்றிக்கு நடுவே மூன்றாவது கண் அதாவது, த்ரிநேத்ரதாரியாய் காட்சி தருகிறார்.


நரசிம்மர் கோவில்களில், நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்ட நிலையில் தரிசனம் தருவார். ஆனால், சிங்கபெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்ட நிலையில்மிகப்பெரிய மூர்த்தியாக அருட்பாலிக்கிறார்.


திருமங்கை ஆழ்வார் தம் பெரிய திருவாய்மொழி முதல்பத்து – ஏழாவது திருமொழியில் சிங்கவேள்குன்றம் எனும் இத்தல பெருமாளைப் போற்றிய பாடல்கள், தினந்தோறும் இங்கே பாடப்பெறுகின்றன. மலையே பெருமாளின் திருமேனியாக உள்ளதால், இங்குபவுர்ணமி கிரிவலம் விசேஷம்.


நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த கோலத்தோடு இங்குள்ள புஷ்கரணியில் தம் திருமேனி நனைத்தெழுந்தார். எனவே அது சுத்த புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது. இரண்யகசிபுவை நரசிம்மர் அழித்த பிரதோஷ வேளையான சாயங்கால நேரங்களில் பிரகலாதவரதனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. இத்தலத்தில் இருக்கும் அழிஞ்சல்மரத்தை பற்றி ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியின்44வது பாசுரத்தில் இந்த மரத்தின்சிறப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது.


பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்ததால் பாடலாத்ரி என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது. நரசிம்மர் உக்கிரத் தோற்றத்தில் வீற்றிருக்கும் சிங்க பெருமாள் கோவில் ஊருக்குள் யானைகள் அழைத்து வரப்பட்டால், அவை இரவு தங்குவதில்லை என்பது நடைமுறை. ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர்தனித்தனி சன்னதிகளும்உள்ளன. கோவில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. 12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர். இங்கு மூலவர் சன்னதியின்கீழ் உள்ள விமானம் பிரணவ கோடி விமானம் எனப்படும்.


திருவிழா: சித்திரை வருடப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, நரசிம்மர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, வைகாசியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி 10 நாள் பிரமோற்ஸவம், ஆடிப்பூரம், ஆவணியில்பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை,தை சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் 5 நாள் தெப்ப உற்சவம், பங்குனி உத்திரம்.


அமைவிடம்: இந்தப்புனித தலம் தமிழ்நாட்டில் சென்னை மாநகரத்திற்கு தெற்கே தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தில்இருந்து 22 கி.மீ., துாரத்தில் சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிலையத்திற்கும், ரயில்நிலையத்திற்கும்அருகாமையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது.


மூலவர் : ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள்

உற்சவர் : ஸ்ரீ ப்ரஹலாத வரதர்ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் எழுந்தருளியுள்ளார்

தாயார் : ஸ்ரீ அஹோபிலவல்லி தாயார்

விமானம் :ப்ரணவகோடி விமானம்

தீர்த்தம் : சுத்த புஷ்கரணி

க்ஷேத்ரம் : பாடலாத்ரிபுரம்

ஆகமம் : ஸ்ரீ வைகாநஸம்

ஸ்தல விருக்ஷம் : பாரிஜாதம்


ஆகமம் வழிபாடு : ஸ்ரீவைகாநஸ பகவத் சாஸ்திரம்

இதர சிறப்புகள் : ஸ்ரீ ஆண்டாளுக்கும்,ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாளுக்கும்தனித் தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன.

ஆழ்வார்கள், ஆச்சர்ய புருஷர்கள் சன்னதிகளும் இங்கு அமைந்துள்ளன.சன்னதி தெரு முனையில் சிறிய திருவடிகள் (ஹனுமார் ) சன்னதியும் அமைந்துள்ளது.

திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: பாடலாத்ரி நரசிம்மர் கோவில், சிங்கபெருமாள் கோவில், -603202, செங்கல்பட்டு மாவட்டம். போன்: +91- 44-2746 4325, 2746 4441

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷம். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
பெரியகுளம்; வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடப்பதற்கு மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு 108 சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 26 வயது தெய்வானை யானை பராமரிக்கப்படுகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar