தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் செவ்வாய் சிறப்பு வழிபாடு; முருகனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2024 11:12
கோவை; பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. விழாவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன், சந்தன காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.