திருச்சானூர் பிரம்மோற்சவம்; சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2024 12:12
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் இன்று சர்வ பூபால வாகனத்தில் தாயார் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருமலையில், ஏழுமலையானுக்கு நடக்கும் அனைத்து உற்சவங்களும், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி, கார்த்திகை மாதம், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தாண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் தாயார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று காலை கலியமர்த்தன கிருஷ்ணர் அலங்காரத்தில் சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.