குன்றத்துார்; குன்றத்துாரில் பழமை வாய்ந்த திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் ரகு தலமாக விளங்கும் இக்கோவிலில், தினசரி ஏராளமானோர் வழிபடுகின்றனர். இக்கோவிலின் எதிரே சூர்யபுஷ்கரணி குளம் உள்ளது. இந்த குளத்திற்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள், கழிவுநீர் கலந்துள்ளதோடு துார்ந்தும் உள்ளன. இதனால், குளத்திற்கு போதிய நீர்வரத்து இல்லை. பெஞ்சல் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கன மழையால், குன்றத்துாரைச் சுற்றியுள்ள ஏரி, குளங்கள் நிரம்பியுள்ள நிலையில், இந்த கோவில் குளம் மட்டும் போதிய தண்ணீர் இன்றி உள்ளது. குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை, குளத்தில் தேக்கி வைக்கும் வகையில் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.