பதிவு செய்த நாள்
06
டிச
2024
10:12
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெரிய வடவள்ளி பகுதியில் புஜ்ஜிங்கம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
பெரிய வடவள்ளி பகுதியில் உள்ள அருள்மிகு புஜ்ஜிங்கம்மன் கோவிலில், பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது. முன்னதாக கடந்த 3ம் தேதி முதல் கால பூஜை, மண்டல பூஜை, மகா தீபாரதனை போன்றவைகள் நடந்தது. அதை தொடர்ந்து 4ம் தேதி காலை இரண்டாம் கால யாகம், விமான கோபுர கலசம் பிரதிஷ்டை, தேவதா பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாட்டுதல் போன்றவைகள் நடந்தன. மாலை மூன்றாம் கால யாகம் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று அதிகாலை நான்காம் கால யாகம், சர்வ காயத்ரி ஹோமம், நாடி சந்தானம், யாத்ரா தானம் நடந்தது. பின்னர் வேத மந்தரங்கள் முழங்க, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ சிவகார்த்திகேயன் ஆச்சாரியார்,சிவ ஸ்ரீ சுகவனேஸ்வான் சிவம் ஆகியோர் தலைமையில் விமான கலகசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபகனை காட்டப்பட்டது. மாலை 3 மணிக்கு பஜனை நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.