திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், 51ம் ஆண்டு அய்யப்பன் திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் அய்யப்பன் சன்னதியில் 18 விளக்கு பூஜை நடத்தப்பட்டு, அன்னாபிேஷகம் நடந்தது. நேற்று காலை கணபதி பூஜை, அய்யப்பன் ஊர்வலம் செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இருந்து பஞ்ச வாத்தியம் முழங்க தீர்த்தீஸ்வரர் கோவில் வடை நடந்தது. மதியம், சமபந்த போஜனம் நடந்தது. மாலை, அலங்கரிப்பட்ட வாகனத்தில் அய்யப்பன் திருவீதி உலா வந்தார். அப்போது வழியில் பக்தர்கள் விளக்கு ஏந்தி, அய்யப்பனை வழிபட்டனர். இரவு மகாதீபாராதனை, தாயம்பளை நடந்தது. இன்று அதிகாலை திரிவிரிச்சல், பால்கிண்டி, மற்றும் அய்யப்பன் வாவர் வெட்டும் தடவும் நிகழ்ச்சியுடன், விழா நிறைவு பெற்றது.