பதிவு செய்த நாள்
06
டிச
2024
03:12
தஞ்சை; கும்பகோணம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைப்பெற்றது: இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் நவக்கிரகங்களில் இராகு ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு விழா இன்று காலை துவங்கியது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் மற்றும் புனித நீரை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடிமரத்தில் நந்திக்கொடி ஏற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமிகளுக்கும் மகா தீபாராதனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.