கார்த்திகை பஞ்சமி; வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2024 01:12
கோவை; சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
பஞ்சமியில் வாராகியை வழிபட எதிரி தொல்லை நீங்கும். தடைகள் விலகும். ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வாராகி அம்மனை வழிபட்டு வருவது வாழ்வில் பலவிதமான ஏற்றங்களை கொடுக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க கார்த்திகை பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று கோவை, சுண்டைக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு, புட்டு விக்கி பாலம் அருகே உள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.