மதுவனேஸ்வரர் கோவிலில் வள்ளி திருமண விழா; யானை துரத்தும் காட்சி கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2024 03:12
திருவாரூர்; பிரசித்தி பெற்ற மதுவனேஸ்வர் கோவிலில் வள்ளி திருமண வைபவம் நடைபெற்றது. விழாவில் யானை துரத்தி செல்லும் காட்சியை கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள மதுவநாயகி உடனுறை மதுவனேஸ்வரர் கோவில் யானை புகாத மாட கோவிலாக பிரசித்தி பெற்றதாகும். இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் முருகப்பெருமானுக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் வள்ளி திருமண விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக முருகப் பெருமானுக்கு பால், மஞ்சள், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா காட்சி நடைபெற்றது.பின்பு நன்னிலம் வடக்கு வீதியில் முருகப்பெருமான் திருமணம் செய்வதாக இருந்த வள்ளி தேவியை யானை துரத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்இந்த காட்சியை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி திருமணம் நடைபெற்றது.