கோயில் குளத்தில் உப்பு மிளகு இடுவதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2012 04:11
உடலில் பருக்கள், கட்டிகள், தீப்புண்கள், தழும்பு ஏற்பட்டால் கோயிலுக்கு உப்பு, மிளகு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ள வேண்டும். இறைவன் அருளால் அவை மறைந்து விடும். நேர்த்திக்கடனாகிய உப்பு மிளகை வாங்கி கோயிலில் செலுத்த வேண்டும். குளத்தில் போடக்கூடாது. உப்பைப் போடுவதால் குளத்து நீர் மாசுபடுவதுடன் நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். குளத்துக்குள் பாலிதீன் பேப்பர்களும் மிதக்கும்.