பரிகார பூஜை செய்தால் துன்பத்தை அடியோடு தவிர்க்க முடியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2012 04:11
ஒருவருக்குக் கடுமையான தலைவலி வந்துவிட்டது. சாதாரண டாக்டர்களை நம்பாமல் மிகப்பெரிய மருத்துவமனையில் உள்ள டாக்டரிடம் காண்பித்தார். அவரும் மருந்து மாத்திரை கொடுத்தார். தலைவலி தீருமோ, தீராதோ என்ற அவநம்பிக்கையுடன் மருந்தைச் சாப்பிட்டதால் தலைவலி தீரவில்லை. பிறகு இதைப்போலவே நம்பிக்கையில்லாமல் பல டாக்டர்களிடமும் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. கடைசியாக அமெரிக்காவில் வைத்தியம் செய்து கொள்ள முடிவெடுத்தார். அங்கு ஒரு டாக்டரைப் பார்த்து தன் கதையை ஆரம்பத்திலிருந்து எடுத்துச் சொன்னார். பலவகையான டெஸ்டுகளை செய்தபின் ஒரு மருந்துப்பொடியைக் கொடுத்தார். அவரும் அதை சாப்பிட்டார். சிறிது நேரத்திலேயே குணம் தெரிந்தது. தீராத என் தலைவலியை ஒரு பொட்டல மருந்திலேயே குணப்படுத்தி விட்டீர்களே! என்று ஆச்சரியம் கொண்டார். டாக்டர் அவரிடம்,உங்கள் நம்பிக்கை குறைவினால் தான் தலைவலி தொடர்ந்தது. இப்போது தான் நம்பிக்கையுடன் சாப்பிட்டதும் தலைவலி தீர்ந்து விட்டது, என்றார். இந்த கதைபோலத் தான் உள்ளது உங்களின் கேள்வி. எதையும் நம்பிக்கையில்லாமல் செய்யாதீர்கள். நம்பிக்கை முழுமையாக இருந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.