திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திரங்கள் சமர்ப்பிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2024 11:12
திருச்சி; கைசிக ஏகாதசி விழாவையொட்டி, திருப்பதி கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திரங்கள், பகுமானங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
திருப்பதி வேங்கடமுடையான் வஸ்திர மரியாதையுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் மற்றும் அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர், கோவில் இணை கமிஷனர் மற்றும் ஏராளமான பக்தர்கள் வீதியுலா வந்தனர். பின்னர் வஸ்திரங்கள், பகுமானங்கள் ரெங்கநாதருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.