ஏமூர் பகவதி அம்மன் கோவில் யானை ராஜகோபாலன் உயிரிழந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2024 11:12
பாலக்காடு; கல்லேக்குளங்கரை ஏமூர் பகவதி அம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ராஜகோபாலன் 59, என்ற வளர்ப்பு யானை உயிரிழந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு அகத்தே த்தறை அருகே உள்ளது கல்லேக்குளங்கரை ஏமூர் பகவதி அம்மன் கோவில். இந்தக் கோவில் தேவஸ்தானத்திற்கு ராஜசேகரன், ராஜகோபாலன், ஆகிய பெயர்கள் இரு வளர்ப்பு யானகள் இருந்தன. 2012 அக். 31ம் தேதி ராஜகோபாலை ஒப்பிடுகையில் வயதில் இளைய யானையான ராஜசேகரன் நோய்வாய்ப்பட்டு இறந்தது. இந்த நிலையில் அக். மாதம் முதல் கால் மற்றும் தொற்று நோய்களால் அவதிப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த ராஜகோபாலன் என்ற யானை நேற்று மாலை உயிரிழந்தது. யானையின் உடலை இன்று காலை வாளையார் வனத்திற்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்திய பின் எரியூட்டப்பட்டன. கல்லேக்குளங்கரை சேந்தமங்கலம் சிவன் கோவிலில் நடக்கும் சிவராத்திரி உற்சவத்தையொட்டி நடக்கும் யானையோட்டம் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளும் ராஜகோபாலன், கடைசியாக கலந்து கொண்டது கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்த கல்லேக்குளங்கரை மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆகும். திருச்சூர் பூரம், திருப்புணித்துறை பூர்ணத்ரயேஸ்வரா கோவில் உற்சவம் என மாநிலத்தின் பெரும்பாலான உற்சவங்களிலும் உள்ள அணிவகுப்புகளில் ராஜகோபாலன் கலந்து கொண்டுள்ளது. கோவை சித்தாபுத்தூர் ஐயப்பன் கோவில் திருவிழா அணிவகுப்பிலும் தவறாமல் பங்கேற்ற யானை ராஜகோபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.