திருவண்ணாமலையில் மகாதீபம்; மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2024 11:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை. பரணி தீபத்துக்கு 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி கிரிவலமும் நடைபெறும் என்பதால் திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு 40 லட்சம் பேர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மகா தீபம் ஏற்ற 350 கிலோ எடை கொண்ட கொப்பரையையும் 450 கிலோ நெய்யையும் 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது கொண்டு செல்ல தேவையான மனித சக்திகளை பயன்படுத்தப்படும். மகா தீபத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை. பரணி தீபத்துக்கு 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 13ல் காலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.