பிரான்மலையில் திருக்கார்த்திகை தீபம்; தீப கொப்பரை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 12:12
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் 2000 அடி உயர பிரான்மலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக புதிதாக செய்யப்பட்ட கொப்பரை சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மலை உச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சங்க இலக்கியத்தில் பாடப்பெற்றதும் பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரியதுமான திருக்கொடுங்குன்றம் என்ற பிரான்மலை 2000 அடி உயரமுடையது. இம்மலை உச்சியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக இந்த ஆண்டு முதல்முறையாக 165 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டரை அடி உயர கொப்பரை பக்தர்களால் தயாரித்து வழங்கப்பட்டது. இந்த புதிதாக செய்யப்பட்ட கொப்பரை சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மலை உச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விழாக் குழுவினரால் கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.