விழாவையொட்டி, கடந்த 4ம் தேதி காலை கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம், இரவு விநாயகர் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, 5ம் தேதி காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவு பஞ்சமூர்த்திகள் வாகன வீதியுலா, 6 முதல் 12ம் தேதி வரை சந்திரசேகரர் புறப்பாடு நடந்தது. 11ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், பரிவேட்டை, பஞ்சமூர்த்திகள் வாகன புறப்பாடு நடந்தது. இதையடுத்து, இன்று காலை 9:00 மணிக்குமேல் 10:00 மணிக்குள் தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து, நாளை 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் தேரடி பார்த்தல் மற்றும் மாலை 6:00 மணிக்குமேல் மலை மேல் ரோகிணி தீப உற்சவம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.