ராகுகேது இரண்டும் ராசிமண்டலத்தை வலம்இருந்து இடமாகச் சுற்றும் நிழல்கிரகங்கள். ராகுவை போல கொடுப்பாரில்லை; கேதுவைப் போல கெடுப்பாரில்லை என்ற ஜோதிடப் பழமொழி உண்டு. ராகுகேது கோள்சாரத்தில் சரியில்லாத பட்சத்தில், ராகுத்தலமான திருநாகேஸ்வரம், கேது தலமான கீழப்பெரும்பள்ளம் சென்று வழிபடலாம். ராகுவுக்காக துர்க்கை, கேதுவுக்காக விநாயகர் வழிபாடும் நன்மையளிக்கும்.