பதிவு செய்த நாள்
14
டிச
2024
08:12
வடபழனி: வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வடபழனி ஆண்டவர் கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருநாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 6:30 மணிக்கு அபிஷேகம் முடிந்தவுடன், மூலவரும் முருகப் பெருமானும் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மதியம் 12:00 மணிக்கு உச்சி காலத்தில், வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டது. பின், மாலை 5:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு கார்த்திகை பூஜை நடந்தது. மூலவர் சன்னிதி சுற்றும்பிரகாரத்தில், 108குத்து விளக்குகள் ஏற்றப்பட்டது. மூலவர் சன்னிதி, உட்பிரகாரம், கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனால், கோவில் வளாகம் முழுதும் தீப ஒளியாக காட்சியளித்தது. தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.