மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2024 07:12
மதுரை; கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. தீபங்களின் வெளிச்சத்தில் பொற்றாமரை குளம் ஜொலித்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நேற்று லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டது. இக்கோவிலில் திருக்கார்த்திகை விழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகளுடன் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் ஆடி வீதியில் உலா வந்து அருள்பாலித்தனர். விழாவில் நேற்று கோவிலில் லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டது. தீபங்களின் வெளிச்சத்தில் பொற்றாமரை குளம் ஜொலித்தது. இரவு 7:00 மணிக்குள் அம்மனும், சுவாமியும் கீழ மாசி வீதி தேரடி அருகில்சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.