ஒச்சாண்டம்மன் கோயில் கார்த்திகை வழிபாடு; சின்னப்பெட்டி எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2024 09:12
உசிலம்பட்டி; பாப்பாபட்டி கிராமத்தில் இப்பகுதி மக்களின் குலதெய்வக் கோயிலான ஒச்சாண்டம்மன் கோயில் உள்ளது. அம்மனின் வழிபாட்டுக்குரிய பூஜை பொருட்கள் அடங்கிய 5 பெட்டிகள் உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் உள்ளது. ஆண்டு தோறும் மகாசிவராத்திரி தினத்தில் 5 பெட்டிகளையும் எடுத்துச்சென்று வழிபாடு நடத்துவர். ஆடிமாதத்தில் நடுஆடி, கார்த்திகை மாத வழிபாட்டுக்கு சின்னப்பெட்டியில் உள்ள பூஜை பொருட்கள் மட்டும் எடுத்துச் சென்று வழிபாடு நடைபெறும். நேற்று கார்த்திகை வழிபாட்டுக்காக சின்னப்பெட்டி எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பூசாரிகள், கோடாங்கிகள், பக்தர்கள் உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து சின்னப்பெட்டியை எடுத்து நடைபயணமாக பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலுக்குச் சென்றனர். கோயிலில் உள்ள 42 தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின் பெட்டியை உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு கொண்டு வந்தனர்.