பேரையூர் மேலப்பரங்கரி சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகை மகா தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2024 09:12
பேரையூர்; பேரையூர் மேலப்பரங்கரி சுப்பிரமணியசாமி கோயில் சரவணப் பொய்கை மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படடது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த மலை மீது பழமை வாய்ந்த மல்லிகா அர்ஜுனா லிங்கசுவாமி கோயில் உள்ளது.நான்கரை அடி தீபக் கொப்பரையில் ஆறு அடி தென்னை மரத்தில் சுற்றப்பட்ட திரியில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இழுப்ப எண்ணெய், பசு நெய் ஆகியவைகளுடன் இந்த மகா தீபம் ஏற்றப்படடது. இந்த மகா தீப கொப்பரை திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ லோபமாதா அகஸ்தியர் ஆசிரமத்தின் வாயிலாக கடந்த டிசம்பர் 2ம் தேதி பேரையூர் கொண்டுவரப்பட்டு மலைக்கு மேல் கொண்டு செல்லப்பட்டது. தீபத்தினை பேரையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களும் தங்களது வீட்டு மாடியில் இருந்து தரிசனம் பெற்றனர். 200 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகாதீபம் ஏற்றியது குறிப்பிடத்தக்கது.