ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் 182ம் பிறவி திருநாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2024 10:12
அவிநாசி; ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் 1821ம் பிறவித் திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருமுருகன் பூண்டியில் உள்ள கோனா முதலியார் கல்யாண மண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆத்ம லிங்க தம்பிரான் நால்வர் மடத்தில் ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் 1821ம் பிறவி திருநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்பு மந்திர யாகம், பஞ்சாங்க கிரியா யோக பூஜை, சித்தர் பாடல் பாராயணம் ஆகியவை யோகிகள், சாதுக்கள், அடியார் பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள நடைபெற்றது. ஸ்ரீ கிரியா பாபாஜி அன்னதர்ம சேவை குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.