திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2024 10:12
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வர். அந்த வகையில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக, காலை 6:00 மணி முதலே அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பொது தரிசனத்தில் பக்தர்கள் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று மூலவரை தரிசித்தனர். அதே போல, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு தங்கத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.