செஞ்சி லலிதா செல்வாம்பிகை கோவிலில் மார்கழி மாத பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2024 05:12
செஞ்சி; செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு துவங்கியது.
செஞ்சி அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்லாம்பிகை கோவில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. அதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.