தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேக கொடியேற்று விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2024 05:12
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி தேனி மெயின் ரோட்டில் உள்ள நன்மை தருவார்கள் திருத்தலம் தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கான கொடியேற்று விழா நடந்தது. இக்கோயில் வளாகத்தில் 49 அடி மாகாளியம்மன் சிலை உள்ளது. தற்போது புதிதாக குதிரை மேல் இருக்கும் அய்யனார், ஸ்ரீ பத்திரகாளி அம்மன், குபேர காளியம்மன், கவுமாரியம்மன் ஆகிய சிலைகளும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 27ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நடந்த கொடியேற்று விழாவில் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து, கோயில் அறங்காவலர் செல்வம் தலைமையில் கோயில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சீனியப்பன், சௌந்தரபாண்டி, பெருமாள்சாமி, மனோஜ்குமார், சுரேஷ், பழனிக்குமார் மற்றும் பசுமை ஆடை பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி முத்து வன்னியன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.