புவனகிரி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் திருப்பாவை தொடர் சொற்பொழிவு நேற்று மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் ஓங்கி உலகளந்த என்ற பாசுரம் குறித்து சொற்பொழிவு நடந்தது. கீழ்புவனகிரி நன்னைய ராமானுஜக் கூடத்தில் ஆண்டு தோறும் மார்கழிமாதம் தோறும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். நேற்று மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் திருப்பாவையின் மூன்றாவது பாசுரமாகிய ஓங்கி உலகளந்த என்ற பாசுரத்தின் விளக்கத்தை பேராசிரியர் கோகுலாச்சாரியார் விரிவாக எடுத்துரைத்தார். ராமானுஜக் கூடத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் பேரவை, கண்ணதாசன் பேரவை, இறைபணி மன்றம் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தத் தொடர் உரை ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அன்று மாலை ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். நிகழ்ச்சியில் ஆலய தரிசன அறக்கட்டளை நிர்வாகத்தினர் முனைவர் ஸ்ரீராம், ராஜமோகன் , பூவராகவன் , சபா தலைவர் வெங்கடாஜலபதி மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.