சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்தில் மஹா தீப ஆரத்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2024 01:12
சுசீந்திரம்; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்தில் மஹா தீப ஆரத்தி விழா நடந்தது. சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோ வில் முன்பிருந்து நடராஜர் மற்றும் திருமுறை பேழைகள் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்ட பக்தர்கள், கைலாய வாத்திய இசையுடன், நான்கு ரதவீதிகள் வழியாக சுற்றி வந்து தெப்பக்குளம் தெருவை வந்தடைந்தனர். தெப்பக்குளத்தின் மேற்கு கரையோரம் கிழக்குப் பார்த்து மஹா தீப ஆரத்தி வைபவம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ஆதீனங்கள், மடாதிபதிகள், தம்பிரான் சுவாமிகள், சன்னியாசிகள், சிவனடியார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். ஒரே நேரத்தில் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் குளத்தின் மறு கரையில் முழு பவுர்ணமி நிலவின் முன்பாக சன்னியாசிகள் மகா ஆரத்தி எடுத்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில பாரத சன்னியாசிகள் சங்ககுமரி மாவட்ட புரவலர்குழு தலைவர் காமராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மானந்தசரஸ்வதி சுவாமிகள் தலைமையில் அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.