Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் புதிய பஸ்ம குளம் ... சபரிமலையில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்! சபரிமலையில் இதுவரை 25 லட்சம் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் குவியும் பக்தர்கள்; மண்டல பூஜைக்கு இன்னும் ஆறு நாட்களே.. ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் குவியும் பக்தர்கள்; மண்டல பூஜைக்கு இன்னும் ஆறு நாட்களே.. ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

20 டிச
2024
10:12

சபரிமலை; சபரிமலை நடப்பு மண்டல காலத்தில் வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை கால்கோடியை கடந்துள்ளது. மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் சபரிமலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கடந்த நவம்பர் 16 அதிகாலையில் தொடங்கிய இந்த ஆண்டுக்கான மண்டல காலம் அதிக அளவிலான புகார்களுக்கு இடம் கொடுக்காமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் நடத்தி திரும்பினர். பிரசாதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்கள் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது .தினசரி 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் நடத்தினர். இதனால் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரங்குத்தியில் இருந்து பக்தர்கள் கட்டம் கட்டமாக அனுப்பப்பட்டனர். கடந்த 18 இரவு 10:00வரை உள்ள கணக்கின்படி 26 லட்சத்து 8,349 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். இது நேற்று 27 லட்சத்தை கடந்தது.


மண்டல பூஜைக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபரிமலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. வரும் 22 காலை 6:00 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டு 25 மதியம் பம்பை வந்தடைகிறது. இங்கு கணபதி கோவில் அருகே பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் தங்க அங்கி பின்னர் தலை சுமடாக சன்னிதானம் கொண்டுவரப்படும். அன்று மாலை 6:30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். 26 -ல் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3:30 க்கு தொடங்கும் நெய்யபிஷேகம் காலை 11:00 மணியுடன் நிறைவுறும். மதியம் 12:00 - க்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறும். அதைத்தொடர்ந்து நடை அடைக்கப்படும். தொடர்ந்து மாலை 4:00 க்கு நடை திறந்து பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு 10:00 அல்லது 11:00 க்கு நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மகர விளக்கு கால பூஜைகளுக்காக 30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar